காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு – பொலிஸில் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு
காங்கேசன்துறை சீமெந்துதொழிற்சாலையில் இரும்புகள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தான் எந்தவேளையிலும் பொலிஸாரிடம் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நான் சிஐடியின் முன்னிலையில் செல்வேன் அதன் காரணமாக பொலிஸார் என்னை கைதுசெய்யலாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைதுசெய்வதற்கு சபாநாயகரின் அனுமதி தேவை என்பதால் அதனை வழங்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் சரணடைய முன்வந்துள்ளதால் அவரை கைதுசெய்யலாம் என பிரதிசபாநாயகர் அஜித்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.












கருத்துக்களேதுமில்லை