திருகோணமலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் மாயம்!

திருகோணமலை சீனன்வெளியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை மாலை சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவரே காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், கடலுக்கு சென்றவர் சனிக்கிழமை வரை கரைக்கு திரும்பவில்லை.

அவரின் கையடக்க கைப்பேசிக்கு தொடர்பு ஏற்படுத்தியபோதும் அது இயங்காததையிட்டு அவரது உறவினர்கள்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் லங்காபட்டுண கடற்படை முகாமில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் கடற்படையினரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் தம்மிடம் தேடுதலுக்கான படகுகள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு குறித்த மீனவரை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.