இலங்கையில் சுரங்கத்துக்குள் உருவாக்கப்பட்டுள்ள உணவகம்

இலங்கையில் முதன்முறையாக, நிலத்துக்கு அடியில் 124 மீற்றர் தொலைவில் போகல காரீய சுரங்கத்தில் உணவகமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய வசதி உள்ளதாக போகல காரீய சுரங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார்.

மேலும், இந்த உணவகத்தின் ஊடாக காரீயம் வெட்டும் தொழிலாளர்களுக்கும், சுரங்கத்துக்கு வரும் மக்களுக்கும் உணவு வழங்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

1865 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போகல காரீய சுரங்கமானது உயர்தர காரீய ஏற்றுமதி மூலம் உலகில் உயர்ந்த நற்பெயரை பெற்றுள்ளது.

ஜேர்மனி, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு காரீயம் ஏற்றுமதி செய்து நாட்டுக்கு அதிக அளவில் அந்நிய செலாவணியை இந்த காரீய சுரங்கம் ஈட்டித்தருவதாக அதன் நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.