பணத்தை அரச வங்கிகளுக்கு அனுப்ப நடவடிக்கை! இன்று முதல் ஆரம்பமாகும் திட்டம்..T

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான முதல் தவணை கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (16.08.2023) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சமூக நலன்புரி நன்மைகள் சபையின் அறிவிப்பின் மேலும், முதற்கட்டமாக தற்போது அனைத்து சிக்கல்களும் நிவர்த்திக்கப்பட்டுள்ள 15 இலட்சம் குடும்பங்களுக்கான மாதாந்த தவணை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

தவணைக் கொடுப்பனவிற்கான நிதியை நிதி அமைச்சின் ஊடாக அரச வங்கிகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகளுக்கான விசாரணை

பணத்தை அரச வங்கிகளுக்கு அனுப்ப நடவடிக்கை! இன்று முதல் ஆரம்பமாகும் திட்டம் | Welfare Allowance Sri Lanka Bank Deposit

 

இதேவேளை பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் அஸ்வெசும திட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும தொடர்பில் 217,000 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் விசாரணைகளை 5 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.