கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..T

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளி கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தெடர்பில் மேலும் கூறுகையில்,“பயிற்சி இல்லாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்படுவதுடன் அதற்கான பணி விரைவாக ஏற்பாடு செய்யப்படும்.

ஐந்து பிரிவைச் சேர்ந்த முன்பள்ளி பிள்ளைகள் தரம் 1 க்கு வருகிறார்கள். ஒரு முன்பள்ளி அனைத்து செயற்பாடுகளையும் கற்றுத் தருகிறது. சில முன்பள்ளிகள் பத்துக்குள் எண்களைக் கற்றுக்கொடுக்கிறது. மற்றொன்று நூறுக்குள் எண்களைக் கற்றுக்கொடுக்கிறது.

கலந்துரையாடல்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Education Ministry Teaching Training

இவ்வாறு கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் தரம் ஒன்றிற்கு வருகின்றார்கள்.

இப்போது ஜப்பானில், இவை அனைத்தையும் கற்பிக்கிறார்கள். அவ்வாறான ஒரு முறைமையை நடைமுறைப்படுத்தவே இரண்டு வருட முன்பள்ளிக்கான வேலைக் கட்டமைப்பை தேசிய கல்வி அல்லது சர்வதேச தரத்தின்படி உருவாக்க வேண்டும்.

அதனால்தான் அடுத்த வாரம் குழந்தைகள் விவகார அமைச்சகம், தேசிய கல்வி நிறுவனம் மற்றும் கல்வியாளர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளேன்.”என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.