சித்த மருத்துவபீட அங்குரார்ப்பணம்!

(அபு அலா)

திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து, அதை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு திருமலை வளாக சித்த மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் ச.தேவதாசன், கிழக்கு மாகாண சுகாதார சுதேச அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீPதர், சித்த மருத்துவ பீட பதில் பீடாதிபதி பேராசிரியர் சோ.சுதர்சன் மற்றும் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சித்த மருத்துவத்தின் தந்தையாக இருக்கின்ற அகஸ்திய முனிவரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு, சர்வமத அனுஷ்டானங்களுடன் சித்த மருத்துவ பீடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

இதன்போது, சித்த மருத்துவத்தின் தோற்றம் பற்றியும், திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, அதன் வளர்ச்சிப்படிகள் என்ன? இன்று பீடமாக தரமுயரக் காரணமானவர்கள் யார் என்பது பற்றியும் அதிதிகளால் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.