பிளவுகளை ஏற்படுத்தி சூழ்ச்சி மேற்கொள்கின்றார் ஜனாதிபதி! அநுர காட்டம்

13 ஆம் திருத்தம் தொடர்பிலான கருத்தாடல்கள் எவ்வாறு உருவானது? மஹா விகாரையில் தேரவாதம் தொடர்பில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க ஜனாதிபதி திடீரென ஏன் சிந்திக்க வேண்டும்.

குருந்தூர்மலை பாதுகாப்பது யார்? சமூகத்தைப் பல பிரிவுகளாக பிரித்து பிளவுகளை ஏற்படுத்தி சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.  எனவே, நாம் பொய்யான பிளவுகளுக்கு பதிலாக உண்மையான பிளவுகளை சமுகமயப்படுத்தல் வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சமூகத்தை பல பிரிவுகளாகப் பிரித்தனர். சிங்களம், தமிழ் என பிரித்தனர். அனைத்து தேர்தலின் போதும் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 17 ஆம் திகதி ஆகும் போது புலிகள் எழுந்து நிற்கவில்லை. 19 ஆம் திகதி ஆகும் போது ஆவா குழுக்கள் இல்லை.

17 ஆம் திகதி எவ்வாறான விடயங்கள் வெளியில் வந்தன. மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் கொத்து. ஆடை மற்றும் மலட்டுத்தனத்தை ஏற்படுத்தும் வைத்தியர்கள் என வெளியில் வந்தனர். தற்போது மீண்டும் அதனை பரிசீலிக்கும் நிலைமை வெளியில் தெரிகின்றன.

கடந்த சில நாள்களாக நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களை சற்று சிந்தித்து பாருங்கள்.அனைத்தும் இயற்கையாக இடம்பெறும்
சம்பவங்கள் என்று நினைக்க வேண்டாம். திடீர் என மகா விகாரையில் தேரவாதம் தொடர்பில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க ஜனாதிபதி சிந்தித்தார். அரசமைப்பின் 13 ஆம் திருத்தம் தொடர்பிலான கருத்தாடல்கள் எவ்வாறு உருவானது. அதற்கு நாம் இணங்கப் போவதில்லை என சாகார காரியவசம் கூறுகிறார். மீண்டும் அந்த பிளவை ஏற்படுத்த சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.

குருந்தூர்மலையைப் பாதுகாப்பது யார்? இவ்வாறான பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, பொய்யான பிளவுகளுக்கு பதிலான உண்மையான பிளவுகளை சமூகமயப்படுத்த வேண்டும்.

இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் உண்மைகளை மறைத்து புதிதாக பிளவுகளை உருவாக்கினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அவர்களால் உருவாக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பினர்களின் கணக்கிலக்கங்களுக்கு ஒரே தடவையில் பணம் செலுத்தப்பட்டமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளியானது. அவர்களே அதனை உருவாக்கினர்.

உண்மையான பிளவுகளை மறைத்து பொய்யான பிளவுகளை வெளிப்படுத்துகின்றனர். தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டில் யுத்தம் இல்லாமல், பிளவுகள் இல்லாமல் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது. மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும்,குரோதங்களையும் ஏற்படுத்தி நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயற்சி செய்யும் நாடகமாகும். அன்று எதிரிகள் என கூறியவர்கள் இன்று நண்பர்களாக மாறியுள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்கள்  நாட்டின் ஆட்சி, அதிகாரங்கள் யாரிடம் இருந்தது. ராஜபக்ஷ மற்றும் ரணிலிடமே இருந்தது.

நாடு வங்குரோத்து அடைந்து, நாட்டு மக்கள் துன்பத்தில் வாழும் போது அந்த மக்களுக்காக  மனசாட்சிக்கு ஏற்ப உதவ முன்வருவதே உண்மையான பிரஜை ஒருவரின் கடமையாகும். எனினும் இன்றைய ஆட்சியாளர்களிடத்தில் அவ்வாறான பண்புகள் இல்லை. அவர்கள் உண்டு, குளித்து, மகிழ்கிறார்கள். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.