குப்பைக்குள் வீசப்பட்ட 8 பவுண் தங்க நகைகளை மீட்டுக்கொடுத்த சாவகச்சேரி நகரசபை சுகாதாரபிரிவு!

 

யாழ்.சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது –

சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்கின்ற பொழுது குறித்த நகைகளும் குப்பைகளோடு குப்பைகளாக கட்டப்பட்டு வீதியில் கொட்டப்பட்டிருந்தன.

தவறுதலாக அவர்களால் வீசப்பட்ட நகைகளை சாவகச்சேரி நகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தமை அந்தப் பிரதேசத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.