சுற்றுலாத்துறைக்கு சிறந்த வேலைத்திட்டம் அவசியம் – தேசிய மக்கள் சக்தி
சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப அரசாங்கமும் மத்திய வங்கியும் இணைந்து சிறந்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேசிய சுற்றுலாக் கொள்கை இல்லை எனவும், அரசாங்கம் இன்னும் அதனை உருவாக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததற்கு நாட்டை ஆட்சி செய்பவர்களே காரணம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை