மயிலத்தடுவிற்கு சென்ற மூன்று ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டமைக்கு எதிராக மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரும்பான்மை இனத்தவர்கள் மற்றும் பௌத்தபிக்குவினால் மூன்று தமிழ் ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டமைக்கு எதிராக மட்டு நகரில் சகஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (22) மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகச் செவ்வாய்க்கிழமை  பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அங்குசென்றவேளை  அனுமதியற்ற முறையில் அமையப்பெற்ற விகாரையின் பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் ஊடகவியலாளர்களை தடுத்துவைத்து அவர்களின் கமராக்களை பறித்து அச்சுறுத்தினர்.

நீண்ட காலமாக மயிலத்தமடு பிரதேசத்தில் பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காகவே செவ்வாய்கிழமை அக்குழுவினரது களவிஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பண்ணையாளர்களுடன் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடலினை மேற்கொண்டதன் பின்னர் திரும்பிச் செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருப்பவர்களும், அங்கிருந்த  பௌத்த மதகுரு ஒருவரும் இணைந்து அனைவரையும் இக்குழுவினரை வழி மறித்துதுள்ளனர்.

பின்னர் ஊடகவியலாளர்களின் கமராக்களில் பதிவு செய்ய காட்சிகளை அழிக்கச் செய்து, உங்களை நீங்கள் வந்த வேனில் வைத்து எரித்து விடுவோம், இது எங்களது பிரதேசம், நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள், என அச்சுறுத்தி, பின்னர் இங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக எதையும் வெளியில் சொல்லக்கூடாது என வெற்றுத்தாழில் கையொப்பம் பெற்றுள்ளனர். பின்னர் மிக நீண்ட நேரத்திற்குப்பின்னர் மாலை வேளை அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளைப் பெற்றபின்னர் ஒருவாறு அக்கும்பலிடமிருந்து அக்குழு மீண்டும் இரவு வீடு வந்து சேர்ந்துள்ளனர்.

இவ்விடயம் அறிந்த மாவட்டத்தின் ஏனைய சக ஊடகவியாளர்கள் மயிலத்தமடுவிற்குச் சென்ற குழுவினர் தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தடுப்பில் ஈடுபட்டவர்கள் மீது உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் மட்டக்களப்பின் ஊடகங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.