பண்டாரவளையில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு தப்பியவரை கைதுசெய்ய பொதுமக்கள் உதவி நாடல்!

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல் அறையொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கொலைச் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் (0718591523) மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு நிலைய கட்டளைத் தளபதி (0718710108, 07185994033) ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பெடுத்து அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஹோட்டல் அறையில் இருந்து வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட பெண் எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்