சிறிய இராணுவ முகாம் சாய்ந்தமருதில் அகற்றம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரை வீதியில்  நீண்ட காலமாக தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த சிறிய இராணுவத்தின் முகாம்  அகற்றப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் இருந்து செயற்பட்ட இராணுவத்தினர் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருந்தனர்.

தினமும் வீதி ரோந்து மற்றும் தற்காலிக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இம்முகாம் இராணுவத்தினர் தற்போது தமது செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி அவ்விடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கடந்த காலங்களில் இடம்பெற்றமை காரணமாக இப்பகுதியில் பல தரப்பினரின் வேண்டுகோளிற்கமைய குறித்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்