இலங்கை – இந்தியா இடையில் பாலத்தை கட்டமுன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுதல் வேண்டுமாம்! கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை

 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்னர் அதுகுறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையில் பாலமொன்றை கட்டுவதென்றால் அது குறித்து மக்களின் கருத்தை அறிவதற்கு சர்வஜனவாக்கெடுப்பைநடத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே அந்நியர்களுக்காக நாட்டுக்குத் துரோகமிழைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்கள் நாட்டின் பகுதிகளை பல நாடுகளுக்கும் சக்திகளுக்கும் விற்பனை செய்கின்றனர் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பல முட்;டாள்தனமான முடிவுகளை எடுக்கின்றனர் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம்கட்டப்போகின்றனர் இந்தியாவின் கருத்திற்கு அமைய கடந்தகாலங்களில் நாங்கள் சில விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம்,அவை அனைத்தும் முட்டாள்தளமான கதைகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாடு எப்போதும் சுதந்திரமான நாடாக காணப்பட்டுள்ளது. நாங்கள் எந்த நாட்டுக்கும் அடிமைகள் அல்லர். இந்த நாட்டின் மன்னர்கள் இந்தியாவுடன் பொருளாதார விடயங்களைக் கையாண்டுள்ளனர். ஆனால் நாங்கள் எவருக்கும் அடிமையாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் நிலைமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் சுதந்திரத்தை பெற்ற நாங்கள் தற்போது அதனை இழக்கப்போகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.