ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாவுக்கு வவுனியாவில் விற்கப்பட்ட மாம்பளம்!

 

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06 ஆம் நாள் மாம்பழ திருவிழாவான சனிக்கிழமை மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபா செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.