அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் தெரிவு

 

நூருல் ஹூதா உமர்

இலங்கைப் பொறியியலாளர்கள் நிறுவனம் வருடத்துக்கான இளம் கண்டுபிடிப்பாளர் எனும் தலைப்பில் மாகாண ரீதியில் அண்மையில் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவன தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிறாக் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பில் கலந்துகொண்ட முஹம்மட் அதீப் (உயர்தர கணித பிரிவு மாணவன்), பாடசாலைப் பிரிவில் பங்குபற்றி இறுதி சுற்று வரை சென்று சாதனையை நிலைநாட்டி உள்ளார். இந்த மாணவனுக்கு பாடசாலை சார்பாகவும் பாடசாலை இளம் கண்டுபிடிப்பாளர் கழகம் சார்பாகவும் புத்தாக்குநர் கழகம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்