கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 25 ஆமைகள் உயிரிழப்பு !

கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி முதல் மேல் மாகாண கடற்கரையோரம் கரை ஒதுங்கிய ஆமைகள் கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்ததாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

25 ஆமைகள் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து உடனடியாக நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு வெடிமருந்துகளை பயன்படுத்தியதன் காரணமாக கடலில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மூன்று ஆமைகளின் வெளிப்புற ஓடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.