கவிஞர் சூரியகலா ஆ.ஜென்சன் எழுதிய 5 நூல்களின் வெளியீடு!

கவிஞர் சூரியகலா ஆ.ஜென்சன் றொனால்ட் பொதுச் சுகாதார பரிசோதகர் எழுதிய 5 நூல்களின் வெளியீட்டு விழா புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொடிகாமம் ஏ9 வீதியில் அமைந்துள்ள நட்சத்திரமஹால் மண்டபத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சுதோக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சிவசுதன், உசன் பவுண்டேசன் உபதலைவரும் வைத்தியருமான ஐ.என்.ஜபநாமகணேசன,; உலக வள்ளுவர் வழி இணையப் பள்ளியின் இயக்குநர் ஜோதி ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உயிர்ப்பு எனப்படுகின்ற தாய்சேய் நலம் தொடர்பான சுகாதார மேம்பாட்டு நூலும்

விழிப்பு எனப்படுகின்ற தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான சுகாதார மேம்பாட்டு நூலும்

காப்பு எனப்படுகின்ற உணவுப் பாதுகாப்பு சம்பந்தமான சுகாதார மேம்பாட்டு நூலும்

திறப்பு எனப்படுகின்ற நேர்மயமான சிந்தனைகளைக் கட்டியெழுப்புதல் எனும் நூலும்

வனப்பு எனப்படுகின்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டன.

ஒரு மேடையில் ஓர் எழுத்தாளரால் 5 நூல்கள் வெளியிடப்பட்டது

பிரதம விருந்தினர் நூல்களை வெளியிட்டு வைக்க
கொடிகாமம் ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர் ந.பாபுஜி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.