யாழ் கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் இன்று

யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் இன்றைய தினம் காலை 09 மணிக்கு ஆரம்பமானது.

கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகின்றது.

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கலந்து கொண்டு இன்றைய கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையில் உள்ள 20 தொழிற்சாலைகளில் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் , புத்தாக்கங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தொழில்கள் மற்றும் வடமாகாணத்திற்கே உரித்தான பல கைத்தொழில்களை Industry 2023 யாழ்ப்பாண பதிப்பு தொழில் கண்காட்சியில் காண கூடியதாகவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.