ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி யூ.எல்.ஏ. மஜீத் எழுதிய “LAW OF ACTIONS” என்ற நூலின் அறிமுகம்

நூருல் ஹூதா உமர்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் வகுப் நியாய சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ.றெளசுல் ஹாதி தலைமையில், நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், தொழில் நியாய சபை நீதிபதிகள், சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள், கல்வியியலாளர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் மற்றும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ. றெளசுல் ஹாதி ஆகியோருக்கு நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் புடை சூழ சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ. ஹிபத்துல் கரீம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதன் போது ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் எழுதிய “LAW OF ACTIONS” என்ற நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.