மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாகவே மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கலாம் வேலுகுமார் தெரிவிப்பு

சுகாதாரத்துறை தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயிருக்கிறது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்த சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 3 ஆம் நான் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாட்டின் சுகாதாரத்துறை மாத்திரமல்ல நாட்டின் எதிர்காலம் தொடர்பாகவும் மக்கள் நம்பி்கை இழந்துள்ளனர். அதனால்தான் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.

சுகாதாரத்துறையில் இடம்பெறும் திருட்டு, கொள்ளை, மோசடிகள் காரணமாகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

குறிப்பாக கொவிட் தடுப்பூசியை பங்களாதேஷ் 5 டொலருக்கு பெறும்போது நாங்கள் 15 டொலருக்கு கொள்வனவு செய்தோம். அதேபோன்று இன்சுலின் இறக்குமதிக்கு 1,56 டொலருக்கு விலைமனு கோரும் நிலையில் இந்த நடைமுறைக்கு வெளியில் சென்று அவசர இறக்குமதி என்ற பேரில் 4 டொலருக்கு இறக்குமதி செய்திருக்கிறது.

இந்த துறையில் மோசடி இடம்பெற்றிருப்பது இந்த  ஓர் உதாரணம் போதுமானதாகும். இதனை யார் செய்தார்கள் என்பதை தேடிப்பார்த்து பதிலளிக்கவேண்டும்.

மேலும் மக்கள் இன்று பாரிய அசௌகரிங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கண் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றால், குருடாக்கி அனுப்புகிறார்கள்.

ஒரு சிறுநீரகத்தில் சிக்கல் இருப்பதாக வைத்தியசாலைக்கு சென்றால் இரண்டு சிறுநீரகங்களையும் எடுத்து விடுகிறார்கள். காய்ச்சலுக்கு மருந்து எடுக்க சென்றால் கையை வெட்டி விடுகிறார்கள். இந்த நிலைமையில் மக்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருந்து மரணிப்பது நல்லது என்ற நினைக்கும்  வந்துள்ளனர்.

அதனால் மக்களுக்கு சுகாதாரத்துறை தொடர்பாகவும் இந்த அதிகாரிகள் தொடர்பாகவும் நம்பிக்கை இல்லை. அதனால் இதில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சுகாதாரத்துறை தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதனையே நாங்கள் கோருகிறோம்.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வெளிப்படுத்தல்களை அரசாங்கம் திசை திருப்ப முயற்சிக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் முஷாரப் எம்.பியும் இதற்கு துணைபோவது அவர் முஸ்லிம் சமுகத்துக்கு செய்யும் துரோகமாகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.