இந்திய பொலிவுட் திரைப்பட நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள் இலங்கை வருகை

கடந்த பல ஆண்டுகளாக இந்திய, ஐரோப்பிய மற்றும் ஹாலிவுட் சினிமாக்களுக்காக இலங்கையை படப்பிடிப்பு தளமாக விளம்பரப்படுத்தி வருகிறோம்.தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இதர துறைசார் பங்குதாரர்கள் உட்பட சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் இலங்கையை தங்களின் சிறந்த திரைப்பட இடமாக தெரிவுசெய்ய ஊக்குவிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு தெரிவித்தார்.

பத்மாவத், விக்ரம் வேதா, கல்லி பாய், மேட் இன் ஹெவன், ஏர்லிப்ட் மற்றும் ராக்கெட் பாய்ஸ் ஆகியவற்றின் திரைப்பட நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள் இலங்கையில் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வருகை தந்துள்ளனர்.

கொழும்பு, கண்டி, நுவரெலியா, எல்ல, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய இடங்களை உள்ளடக்கிய ஆறு நாள் பயணத்தில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள், தங்களின் வரவிருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்களின் படப்பிடிப்புக்காக இடங்களை பார்வையிடவுள்ளதுடன்,   மேலும் அவர்கள் முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ள இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள், அரசு நிறுவனங்களுடன் மற்றும் திரைப்படத்துறை தரப்பினருடன் பல முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ளவுனர்.

இந்நிலையில் இது தொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றதுடன் இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை சுற்றுலாவுக்காக திரைப்பட சுற்றுலாக் கொள்கையை நாங்கள் உருவாக்கி, வெளிநாட்டு திரைப்படத் தயாரிப்பாளர்களை இலங்கைக்கு அழைப்பதற்காக எமது நாட்டு தொழில் தரப்பினருடன் சேர்ந்து சர்வதேச திரைப்பட சுற்றுலா மற்றும் திரைப்பட தளங்களை அடையாளம் காண விசேட  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம்.  அதன் விளைவாக இந்திய சினிமாவை மையமாக வைத்து 2023 ஆம் ஆண்டுக்கான அறிமுகப் பயணத்தை தற்போது நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

கடந்த  ஏப்ரலில் கன்னட சினிமாவிலிருந்து ஒரு திரைப்படக் குழுவை நாங்கள் வரவேற்றோம். மேலும் பிரபலமான இந்திய சினிமா மூலம் எமது இலக்கை அடைய மற்றும் அதனை  விளம்பரப்படுத்திக்கொள்ள  பல இந்திய திரைப்படம் மற்றும் வெப் தொடர்களை தயாரிக்கும் நிறுவனங்களை மிக விரைவில் இலங்கைக்கு கொண்டு வர எதிர்பார்க்கலாம்.மேலும்  தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு திட்டங்களுக்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.