4 அதிகார தூண்களின்மீதும் தாக்குதல் நடத்தி நாட்டை அழிக்கும் சதித்திட்டம்! பிரசன்ன ரணதுங்க கண்டுபிடிப்பு

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, பௌத்த மதம் ஆகிய நான்கு அதிகார தூண்களின் மீதும் தாக்குதல் நடத்தி நாட்டை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நிகழ்ச்சி நிரலின் படி, சனல் 4 அந்தச் செயற்பாட்டின் ஒரு பகுதியாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

வீரகெட்டிய பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முல்கிரிகல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியவை வருமாறு –

இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அது போல கொஞ்சம் பொறாமையும் ஏற்படுகிறது. இங்கு ஜனாதிபதிகளும் இருந்தனர்.

கம்பஹாவின் தலைவர்களும் இருந்தனர். கம்பஹாவுக்கும் இங்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு பொறாமையாக இருக்கிறது.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று எமது கட்சியை வழிநடத்திச் செல்வதால் பெருமை ஏற்பட்டது.

அப்போது திருமதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக நாடு முழுவதும் சென்று செயற்பட்டவர் மஹிந்த ராஜபக்ஷ.

அன்று எங்கள் தலைவருடன் எனக்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது நான் மஹிந்த அவர்களுடன் இருந்தேன். அவருடைய குணங்களால் நாம் அவரை நேசிக்கிறோம்.

அவர் தனது மக்களை ஒருபோதும் விட்டுவிட மாட்டார். அவருடைய ஆள் ஒருவன் தவறு செய்தால், அவனைக் கொண்டுபோய் காதைத் திருகுவார்.  தன் மக்களைக் காத்த தலைவன்.

அதனால் தான் 2015 இல் மஹிந்த தோற்கடிக்கப்பட்ட போது நாட்டு மக்கள் தவறை புரிந்து கொண்டனர். அவர் தோற்கடிக்கப்பட்டதும் அரசியலில் இருந்து விலகுவார் என பலரும் நினைத்தனர். அன்று கேட்டைப் பிடித்து தொங்கிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவர்கள் முகநூலில் அவரை அடித்தார்கள். ஆனால் அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு  குறிப்பாக தென்பகுதி மக்கள் அவருக்கு தலைமைத்துவத்தை வழங்கினர். அந்த கௌரவத்தை தென்னிலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும்.

நாய் இறந்தால் அதன் உண்ணியும் இறந்துவிடும் என்று சொல்கிறோம். இன்றும் நாம் பெருமையுடன் கூறுகின்றோம். மஹிந்த அவர்கள் தோற்றபோது, நாட்டின் சிறப்பை அறிந்த பெரும்பான்மையான மக்கள் அவருடன் இருந்தார்கள். அன்றைய தினம் மஹிந்த காற்றுடன் நாடு சுற்றி வந்தோம். பசஸில் ராஜபக்ஷவின் தலைமையில் பத்து பதினைந்து பேரை கூட்டி பலமான அரசியல் கட்சியை உருவாக்கினோம். அதன்பிறகு, குறுகிய காலத்தில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றோம்.

69 லட்சம் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றோம். பொதுத்தேர்தலில் 150 எம்.பி.க்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாங்கள் அரசாங்கத்தை அமைத்தோம். உறுப்பினர்கள் இல்லாமல் கட்சி இல்லை. நீங்கள் கிராமத்தில் அன்பாக இருப்பதால் 4 வருடங்களில் இதையெல்லாம் எங்களால் செய்ய முடிந்தது.

நீங்கள் பேஸ்புக்கில் கட்சிகளை உருவாக்கலாம். தலைவர்களையும் உருவாக்கலாம். ஆனால் கிராமத்தில் அப்படி இல்லை. அண்மையில், நாட்டில் கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் நெருக்கடி ஏற்பட்டது. ஒரு போராட்டம் நடந்தது. கட்சி என்ற ரீதியில் எமது கட்சியினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எங்கள் உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். இவையனைத்தும்  ஓர் அமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன. மொட்டில் இருந்தவர்களை ஏன் அப்படி அடித்தீர்கள்? ஜனநாயக முறையிலான தேர்தல் மூலம் எதிர்க்கட்சியில் உள்ள எந்த அரசியல் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

எனவே, எமது மக்களை அடித்து வீழ்த்தி ஆட்சிக்கு வர முயற்சித்தார்கள். பொலன்னறுவையில் எமது நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு முகநூலில் பதிவிட்டுள்ளனர். மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களை பேர ஏரியில் வீசி மக்களை அடித்தார். நாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளானோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 300 பேரின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நாங்கள் என்ன தவறு செய்தோம்? 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்தவிற்கும் அவ்வாறே செய்தனர். இந்த விஷயங்களை 3மூ ஆன  கும்பல் செய்தது, நாட்டின் பெரும்பான்மையினர் அல்ல. எங்களைப் பயமுறுத்துவதற்காகவே அந்தச் செயல்கள் செய்யப்பட்டன. 1977ல் எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் எமது அரசாங்கம் இருந்தபோது, எங்கள் ஜனாதிபதி இருக்கும்போது அது நடக்கும் என நாம் நினைக்கவில்லை.

போராட்டம் செய்தவர்கள். விபச்சாரிகளும் போதைப்பொருள் வியாபாரிகளும் இன்று ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். போராட்டம் அமைதியாக தொடங்கியது. ஆனால் அது கடத்தப்பட்டது. பாதாள உலகத்தினர், போதைக்கு அடிமையானவர்கள் ஆட்சி செய்தனர். இது மட்டும் நடக்கவில்லை. நாட்டை அழிக்க வேண்டும் என்றால் நிறைவேற்று, சட்டமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றையும் தாக்க வேண்டும். மதத் தலைவர்கள் காவல்துறையினரை அடிக்க வேண்டும். அப்போது ஒரு நாடு அழிந்துவிடும். இவை மேற்கத்திய நிகழ்ச்சி நிரல்களின்படி நடக்கும் விஷயங்கள். முகநூலில் பிக்கு பற்றிய விடயங்களை பதிவிட்டு பௌத்தத்தை தாக்கியுள்ளனர். நிறைவேற்று அதிகாரியாக இருந்த கோட்டாபய ஊடகங்கள் மூலம் தாக்கப்பட்டார். 225 பேரும் வேண்டாம்  எனக் கூறி  பாராளுமன்றத்தில் நம்பிக்கை இழந்தது.

தற்போது சனல் 4 ஊடாக  நீதித்துறைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செய்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறான கருத்துக்களை கூறுகின்றனர். இராணுவம், காவல்துறை மற்றும் புலனாய்வுத் துறைக்கு எதிரான சித்தாந்தங்களை உருவாக்குகிறார்கள். இறுதியில் என்ன நடக்கும்? இந்த நாட்டை அழிக்க ஆரம்பம் ஏற்படும்.  எமது கட்சியை வழிநடத்தும் மஹிந்த ராஜபக்ச அவர்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த தலைவர் என்பதை கட்சி என்ற வகையில் பொறுப்புடன் கூறுகின்றோம். மேலும், கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களை கொவிட் தொற்றுநோயிலிருந்து காப்பாற்றினார்.

மக்களின் உயிரைக் காத்த தலைவர்கள் எங்கள் கட்சியில் உள்ளனர். அன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார், ஏனென்றால் கட்சியை விட நாடு பெறுமதிமிக்கது என்பதால். நாட்டுக்காக எப்போதும் தியாகம் செய்தவர். இன்று 69 லட்சம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீளக் கட்டியெழுப்புவார் என நம்பி இன்று கட்சியைப் பலப்படுத்தி அவருக்கு உதவுகின்றோம். இது கட்சி என்ற வகையில் தலைமை எடுத்த முடிவு.

எமது கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறக்கூடிய சூழலை நாம் உருவாக்கியுள்ளோம். நான் சொல்கிறேன், தெற்கில் தகுதி தெரிந்த மக்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் சேவையைப் பாராட்டுகின்ற மக்கள் இந்த மாகாணத்தில் உள்ளனர். உங்களுக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி, டபிள்யூ.டி.வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.