வீட்டுக் கூரையினை உடைத்து காத்தான்குடியில் நகை திருட்டு!  4 இளைஞர்கள் கைது

உரிமையாளர்கள் வீட்டிலில்லாத போது வீட்டு கூரையை உடைத்து வீட்டினுள் இறங்கி நகைகளைத் திருடிய 4 இளைஞர்களைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர் எனக் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள டீன் வீதியில் வீடொன்றின் உரிமையாளர்கள் கொழும்புக்குச் சென்றிருப்பதை அறிந்த திருடர்கள் வீட்டின் கூரை மீது ஏறி கூரையை உடைத்து உள்ளே இறங்கி அலுமாரியை உடைத்து  2 செயின், 2 பெண்டன், 1 கராம்பு சோடி, 1 டசல், 3 மோதிரம், 2 மின்னித் தோடுகள் மற்றும் 2000 ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

புதன்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது திருடப்பட்ட நகைகளை மூதூரிலுள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்துள்ள நிலையில் அக்கடையிலிருந்து நகைகள் மீட்கப்பட்டதுடன் நகை கடை உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது  செய்யப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த 23, 19, 17, 19 ஆகிய வயதுடைய நான்கு நபர்களையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்னர்; எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.