நாடாளுமன்ற உறுப்பினர் அதா உல்லா தலைமையில் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

நூருல் ஹூதா உமர்

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் நெறிப்படுத்தலில் புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் கடந்தகால மற்றும் நிகழ்கால அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் தோணா சுத்திகரிப்பும் அபிவிருத்தியும், மைதான அபிவிருத்தி, பாடசாலை மேம்பாடுகள், கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல், கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் உட்பட சமகால அபிவிருத்தி செயல்முறை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் நுஸ்ரத் பானு, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவின் இணைப்பாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.