காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்!

 

நூருல் ஹூதா உமர்

சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நிவாரண, மனிதநேய உதவிகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் சவூதி தமாம் சர்வதேச கண் பார்வை அமைப்பின் உதவியுடன் இலங்கையில் கண் பார்வைக்குறைபாட்டு நோயைக் குறைப்பதற்கான சவூதியின் ‘அந்நூர்’ இலவசத்திட்டம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தலைமையில் வியாழக்கிழமை அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹூம், சிறப்பு அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீP லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரும், கௌரவ அதிதியாக ஜம்மியதுஸ் ஸபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் தாஸிம் மௌலவி மற்றும் ஏனைய பல அரச அலுவலக தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இதன்போது ரஹ்மத் மன்சூர், அடுத்த கண் சத்திரசிகிச்சை முகாம் கல்முனையில் நடத்துவதற்கான கோரிக்கையை விடுத்தபோது அதனை சபையிலிருந்த முக்கியஸ்தர்கள் அனைவரும் ஏகமனதார அங்கீகரித்து ஏற்றுக்கொண்டனர்.

அதி நவீன கருவிகளைக் கொண்டு மிகவும் பயிற்றப்பட்ட வைத்தியர்கள் மூலம் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இச்சேவை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.