ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்’ திட்டத்தின்கீழ் பாடசாலை உபகரணம் வழங்கல்

நூருல் ஹதா உமர்

‘ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்’ என்ற மகுட வாசகத்தின் கீழ் இணைந்த கரங்கள் அமைப்பு தனது கால் தடத்தைப் பதித்து, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவச் செல்வங்களது கல்விச்செயற்பாடுகள், இடைநடுவே கைவிடப்படும் அவல நிலையை ஒழிக்குமுகமாக, நாடு முழுவதும் பரந்துபட்டளவில் செயற்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இணைந்த கரங்கள் அமைப்பால் இம்முறை, பதுளை மாவட்டம் ஸ்பிரிங்வெளியில் அமைந்துள்ள ஊவாஃ பதுஃமேமலை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு தனது கல்வி உதவிக் கரங்களை நீட்டியுள்ளது.

ஏறத்தாழ 150 இற்கும் மேற்பட்ட இம்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள், புத்தகப்பை என்பன வழங்கி வைக்கும் இந்நிகழ்வு, பாடசாலை அதிபர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.

இணைந்த கரங்கள் இணைப்பாளர்களான சி.காந்தன், எம். ஜெகனாதன், திருமதி எல்.சங்கீதா, திருமதி ஏ. பங்கயற்செல்வி ஆகியோரது ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.