132 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு

இலங்கை கடற்படையினரால் நீர்கொழும்பு பகுதியில் வியாழக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 132 மில்லியன்  ரூபாவுக்கும் அதிகபெறுமதியான  400 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் நாட்டை சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளைப்பிரிவு நீர்கொழும்பு மாங்குளி களப்பு பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில்  சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்த போது 10 பொலித்தீன் உறைகளில் பொதிசெய்யப்பட்ட நிலையில்  400 கிலோ 810 கிராம் கேரள கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் கேரளா கஞ்சாவின் மொத்த பெறுமதி 132 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.