அலி சப்ரிக்கு ஒரு சட்டம், பிரான்ஸ் பிரஜைக்கு மற்றொரு சட்டம் தொடர்பில் ஆராய வேண்டும்! என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

சட்டவிரோத சம்பவம் தொடர்பில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகின்றமையால் விசாரணை முடியும் வரை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதித்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்த யோசனை முன்வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தங்கம் 3.3 கிலோ கிராம் மற்றும் 91 ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை தவறாகவும் சட்ட விரோதமாகவும் கொண்டு வந்த போது 75 லட்சம் ரூபாவே அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பிரான்ஸ் பிரஜையொருவர் 80 மில்லியன் பெருமதியான தங்கத்தை கொண்டு வந்தபோது 70 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இங்கு சில தலையீடுகள் காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் பல ஷரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருள்களுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பாக சிக்கல்கள் உருவாகுவதாலும் விசாரணை முடியும் வரை அவர் அனைத்து குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைத்தார்.

இது நாடாளுமன்றத்தில் 225 பேரையும் பாதிப்பதால் இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுக்குமாறும் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும்,இது தொடர்பான பிரேரணை என்றாலும் கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.