சீனக் கடன் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்? யாழ்ப்பாணத்தில் மஹிந்த ஜெசிங்க கேள்வி

சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அல்லது சீன அரசாங்கமோ ஏன் மௌனம் காக்கிறார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த தேசிங்க கேள்வி எழுப்பினார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கின்ற நிலையில்  தற்பொழுது ஐ.எம்.எப். ஏற்கனவே கடன் வழங்கி உள்ள நிலையில் தற்போது  சீனக் கடன் சம்பந்தமாக அறிக்கை கேட்ட போது இலங்கை அரசாங்கம் வாய் திறக்கவில்லை.

சீனா அரசாங்கமோ இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான கால நீடிப்புத் தொடர்பில் எதுவித கருத்துக்களும் கூறப்படவில்லை.

எனவே, கடந்த காலத்தில் மத்திய வங்கி ஆளுநர் எமது நாடு வெளிநாட்டில்  பெற்ற கடன்களைத்  திருப்பிச் செலுத்தாது என வெளிப்படையாகக் கூறியமையால்  பிரச்சினை வந்தது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கி அதற்குத் தவணை போடும் போது அனைத்து நிபந்தனைகளுக்கும் இலங்கை உட்பட வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் பெற்ற கடனுக்கு அந்த நாடுகள் விதிக்கின்ற நிபந்தனைகளுக்கும் நாடு செவிமடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை சீனாவிடம் மட்டுமன்றி இந்தியாவிடமும் கடன்களை வாங்கியுள்ள நிலையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைக்கும் உட்பட வேண்டிய தேவை உள்ளது.

அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து ஒன்பது ரில்லியன் ரூபா கடன் வாங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் கணக்காய்வு திணைக்களம் கூறி இருக்கின்றது. வாங்கப்பட்ட கடனில் மூன்று ரில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக எனில், மிகுதி 9 ரில்லியன் ரூபா கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஆகவே,  75 வருடமாக ஆண்ட ஆட்சியாளர்கள் எமது நாட்டையும் மக்களையும் பின்னோக்கி நகர்த்தியுள்ள நிலையில் தற்போது வெளிநாட்டு கடன் தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.