செந்நெல் கிராம வைத்தியசாலை கோலாகலமாகத் திறந்து வைப்பு! தரம் உயர்த்தப்பட்ட பின்னர்

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சம்மாந்துறை செந்நெல் கிராம ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப் பிரிவு பிரதேச வைத்தியசாலையாக சுகாதார அமைச்சால் தரம் உயர்த்தப்பட்டமைக்கமைவாக இவ்வைத்தியசாலையை உத்தியோகபூர்வவமாகத் திறந்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது.

வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சரசி பிரார்த்தனா விஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் பிரதம அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் கௌரவ அதிதியாகவும், பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ. அப்துல் வாஜித், திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்;வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் வை.பீ.ஏ.அஸீஸ் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது வைத்தியசாலைக்குத் தேவையான அம்புலன்ஸ் மற்றும் தளபாடங்கள், மருத்துவ உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.