காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலய காரைதீவு கமுஃகமுஃகண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் என். திருக்குமார் தலைமையில் இன்று (சனிக்கிழமை) காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதி பங்களிப்போடும், ஆதரவோடும் 66 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் அதி கஸ்டத்திலுள்ள 26 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான கே. டீ. எஸ்.ஜெயலத் கலந்துகொண்டார். மேலும் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி மிதுலா மணிமாறன், ஆசிரியர்களான எஸ். உதயநாதன், எஸ். பாஸ்கரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஏழை மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்தும் உ தவிக்கரம் நீட்டி வரும் இணைந்த கரங்கள் இணைப்பாளர்களான லோ. கஜரூபன், சி.காந்தன், ந.சனாதனன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.