சஜித்துடன் மொட்டுக் கட்சியினர் இரகசியப் பேச்சுவார்த்தை?
மொட்டுக் கட்சியில் இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் சிலர் இரகசியப் பேச்சுக்களை முன்னெடுப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தலை எப்போதும் பிற்போட முடியாது. அரசியலமைப்பின் படி அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 134 இல் ஆரம்பித்து 113 இற்கு இறங்கி இருக்கின்றார்.
ஆகவே மொட்டு கட்சியில் இருந்துக்கொண்டு கடைக்கு செல்லும் சிலருக்கு கூறுகின்றேன் உங்கள் கட்சியிலுள்ள சிலர் எங்களுடன் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள்.
அடுத்த வரும் வேட்பாளர் பட்டியல் கோரப்படும் இந்த தீர்க்கமான சந்தர்ப்பத்தில் அந்த பக்கத்தில் இருந்து இந்த பக்கத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது.
வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய பெரும் சவாலிலுள்ள ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டை பெற்றுக்கொள்ளவும் முடியாது. நாங்கள் தரப்போவதும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.












கருத்துக்களேதுமில்லை