மிருசுவில் படுகொலை : சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கிய மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து மாற்றுக் கொள்கைக்கான நிலையம்  மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாக்கல் செய்த மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் நேற்று (12) அனுமதி வழங்கியுள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான நிலையம், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும்  கொலையின் காரணமாக  பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் தாக்கல் செய்த பல மனுக்களை பரிசீலித்த பின்னரே, பிரிவு 12(1)இன் கீழ் இந்த மனுவை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பொது மன்னிப்பு தொடர்பான பல ஆவணங்களை உச்ச நீதிமன்றத்துக்கு  வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.

மனுக்கள் மீதான தங்கள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவும், அந்த ஆட்சேபனைகளுக்கு மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கி, இந்த வழக்கை அடுத்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி   விசாரணைக்கு ஒத்திவைத்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.