பதுளை – மொரஹெல விபத்து – ஒருவர் உயிரிழப்பு 18 பேர் காயம்!

பதுளை – மொரஹெல வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய உல்பாத ஹண்டி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும்
மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ்சுமே மோதி சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் விபத்துக்குள்ளாகிய 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.