பொலிஸாரால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்!

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் தலைமையில் பொலிஸாரால் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஐ நசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மர நடுகை ஆரம்ப நிகழ்வு திங்கட்கிழமை நடை பெற்றது.

இதன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எமு.நௌபீர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பெறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.ஆர் விஜயவர்த்தன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தகர், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 200 இற்கு மேற்பட்ட மரக்கன்றுகள் பல இடங்களில் நடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.