கந்தளாய் தளவைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு சிறுநீரக இயந்திரம் வழங்கி வைப்பு

சிறுநீரக நோயாளர்களின் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் இரத்த சுத்திகரிக்கும்  இயந்திரம் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (24) வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள தலைமையில் குறித்த இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

கந்தளாய், தம்பலகாமம், சேருவில போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் பெருந்தொகையான மக்கள் தமது பிரதான வைத்தியசாலையாக கந்தளாய் ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருகின்றனர்.

இவர்களில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கந்தளாய் வைத்தியசாலையில் இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை போன்ற தூர வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இது தொடர்பில்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், ஐ.ஓ.சி எரிபொருள் கம்பனியின் வேண்டுகோளுக்கு இணங்க, கந்தளாய் தள வைத்தியசாலைக்கு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பின் அடிப்படையில் புதிய இரத்த வடிகட்டும் இயந்திரம் வழங்கப்பட்டன.

இதில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜெ.ஜெ.முரளிதரன்,மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.