உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்துகின்றோம் – டீ. பி. ஹேரத்

உணவு உற்பத்தி செயல்முறையை நெருக்கடியின்றி பராமரிக்கவும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் அதிக கவனம் செலுத்தப்படுவதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கால்நடை அமைச்சு மக்களுக்கு தேவையான புரதத்தை வழங்கக்கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில், 40 வீதமான திரவ பால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என்றும் இந்நிலையைக் கருத்தில் கொண்டு திரவப் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்தார்.

மேலும், மேய்ச்சல் தரைகளை மேம்படுத்தவும் ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கால்நடைகளுக்குத் தேவையான உணவை தட்டுப்பாடின்றி வழங்குவதன் மூலம் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தேசிய பால் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பால்மாவில் தங்கியிருக்கும் நிலையை மாற்றி அதற்குப் பதிலாக மாற்று முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் திரவப் பாலை மக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

தற்போது கால்நடை தீவனம் இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.