நீதி நிலைநாட்டப்படுதல் வேண்டுமாம் தினேஸ் சாப்டர் குடும்பம் கோரிக்கை!

பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் குறித்து வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத்; தீர்ப்பைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்

அவர்கள் அதில் தெரிவித்துள்ளவை வருமாறு –

நவம்பர் முதலாம் திகதி கௌரவத்திற்குரிய நீதிபதி, தினேஸ்சாப்டரின் மரணவிசாரணை குறித்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தீர்ப்பளித்தார்.

நீண்டகால வலிமிகுந்த காத்திருப்பு முடிவிற்கு வந்தமை குறித்து தினேசின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் நிம்மதியடைகின்றோம்.அந்த விசாரணைகளில் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக தினேஸ் சாப்டர் தற்கொலை செய்துகொண்டார் என்ற பிழையான கதையாடல்களால் இழைக்கப்பட்ட அநீதியை தவிர்ப்பதற்கு நாங்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

கடந்த பல மாதங்களாக தினேசின் உடல் அகழப்பட்டு ஓய்வுமறுக்கப்பட்டு நாங்கள் கல்லறையின்றி அந்த துயரத்தை அனுஸ்டித்தோம்.

தற்போது இறுதியாக தினேஸ் கொலைசெய்யப்பட்டார் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது மரணம் குறித்த உண்மையை உறுதிப்படுத்துவதற்காகப் பாடுபட்டவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கின்றோம்.

மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தியது ஓர் ஆரம்பம் மாத்திரமே என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

தினேஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது மேலும் அநீதி இழைக்கப்படுவதைத்; தவிர்த்துள்ளது அவ்வளவு மாத்திரமே -இதன் மூலம் நீதிநிலைநாட்டப்பட்டு விட்டதாகக் கருத முடியாது.

நீதித்துறையினர் தொடர்ந்தும் தினேசின் மரணத்திற்கு நீதியை நிலைநாட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

தினேஸ் எங்களின் பல சுமைகளை சுமந்ததுடன் நலிந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள்  நோக்கி தனது கரங்களை நீட்டினார். எங்கெல்லாம் அநீதியை பார்த்தாரே அங்கெல்லாம் அதற்கு எதிராக போரிட்டார். – எனத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.