அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொக்கேயின், மரிஜுவானா போதைப்பொருட்கள் சிக்கின!

ஆறு கோடியே அறுபத்து ஒன்பது இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பொறுமதியான கொக்கேயின்  மற்றும் மரிஜுவானா போதைப்பொருள் என்பன நேற்று செவ்வாய்க்கிழமை (21) கைப்பற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலிருந்து விமான அஞ்சல் பொதியாக கம்பஹா பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றுக்கு இந்தப் போதைப்பொருள் முகவரியிடப்பட்டிருந்தது.

இந்தப் பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது 5 கிலோ 161 கிராம் மரிஜுவானா மற்றும் 511 கிராம் கொக்கேயின் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

உணவு பெட்டி ஒன்றில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க  அதிகாரிகளால் இவை  கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பொதி அனுபப்பட்ட முகவரியைச்  சேர்ந்த  பெண்ணின்  அனுமதியுடன் பொதியை எடுத்துச் செல்ல வந்த கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரும் வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களைக் கஞ்சியப்படுத்தும் களஞ்சிய ஒன்றில் பணிபுரியும்  அதிகாரி ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.