ஷம்மியை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை : நீதிபதிகளை விமர்சிப்பதையிட்டு கவலையடைகிறேன் – ஜனாதிபதி

ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்றும் நீதிபதிகளை விமர்சிப்பதையிட்டு கவலையடைவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற சிறப்புரிமையில் மறைந்து கொண்டு நீதிபதிகளை குற்றஞ்சாட்ட வேண்டாம். நாம் எமது வேலைகளை செய்வோம், நீதிபதிகள் அவர்களின் வேலைகளை செய்யட்டும். பிரச்சினைகள் இருந்தால் முறையாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம். நீதிபதிகளை விமர்சிப்பதையிட்டு கவலையடைகிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, கிரிக்கெட் விவகாரம் நீண்டகால பிரச்சினை. இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்களால் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. சட்டத்தின்  ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும். ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்றும் கூறினார்.

அத்துடன், அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தின்  ஒரு பகுதியல்ல, அது நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதியின் விடயதானம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.