வெளிநாட்டுக் கொள்கை குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்!

”வெளிநாட்டுக்  கொள்கை குறித்து இலங்கை அரசு அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்” என தேசிய அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய ஏற்பட்டாளர் அன்ரனி யேசுதாசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(21) யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சர்வதேச மீனவர் தினமான இன்று (21) மீனவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையை பொறுத்தவரையில் இன்றைய மீனவர் தினத்தை கொண்டாடுவதற்கு மீனவர்களால் முடியுமா? சந்தோஷமாக அவர்களால் கொண்டாட முடியுமா என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது.

ஏனெனில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள மீனவர்களுக்கான சட்டமானது சிறு மீனவர்களுடைய வாழ்வை பாதிக்கின்றது.

அவர்களுடைய தொழிலை இல்லாத செய்கின்ற, அவர்களுடைய வளங்களை பாதிக்கின்ற, வளங்களை சூறையாடுகின்ற ஒரு சட்டமாக இருக்கின்றது.

இச் சட்டம் தொடர்பாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா உட்பட, ராஜாங்க அமைச்சர் உட்பட அரசு இதைக் கவனத்தில் கொண்டு மீனவர்களோடு கலந்துரையாடி உடனடி மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் அரசு இந்த வெளிநாட்டு கொள்கை தொடர்பாக அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும், அதே நேரம் வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவருடைய அநேகமான காணிகள் ராணுவ மயமாக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது, மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும்,  காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

1990 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து வாழுகின்ற அநேக மக்களுடைய காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாது இருக்கின்றது இந்த காணிக்காலம் விடுவிக்கப்பட வேண்டும் என இன்றைய நாளிலே நாங்கள் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்”இவ்வாறு அன்ரனி யேசுதாசன்  தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.