எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியும் ஜனாதிபதியின் ஆலோசகரும் பொறுப்புக் கூற வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர்

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை (27) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

திருடர்களை அடையாளப்படுத்தியுள்ளதால்  நான் பழிவாங்கப்படுகிறேன். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க பொறுப்புக் கூற வேண்டும். இந்த கருத்தை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டாம் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன் என்னை நெருக்கடிக்குள்ளாக்க நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது. எனது பாதுகாப்பையும், எனது குடும்பத்தாரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துங்கள். வாழ விடுங்கள் என்றும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இதேவேளை, கிரிக்கெட் விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தற்போது தீர்வுகாணாவிடின், அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஊடாக நான் தீர்வு காண்பேன் என்றும்  விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.