3 வருடங்களில் 2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டவிரோதமாக அனுமதி! – ஜோஸப் ஸ்டாலின்!

கணக்காய்வாளர் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம்  வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 3 வருடங்களில்   2,367 பிள்ளைகள்  பிரபல பாடசாலைகளில்  சட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில்  அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜோஸப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2020 ஜனவரி 1 முதல் 2022 மே 31 வரையிலான காலப்பகுதியில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட அறிக்கையில் மூலம் சட்ட வரையறைக்கு  அப்பாற்பட்ட  வகையில் பிள்ளைகளை அனுமதிப்பதற்காக 3,308 கடிதங்களை கல்விச் செயலாளர் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது என்றார்.

அவற்றில்  72 சதவீத கடிதங்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.