மிஹிந்தலை புனித பூமியிலிருந்து பாதுகாப்பு படையினரை நீக்க எடுத்த தீர்மானம் தவறு சஜித் கூறுகிறார்

மிஹிந்தலை புனித பூமியில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடிய இருவரைக் கைதுசெய்த காரணத்தால், பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 250 உத்தியோகத்தர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது பாரிய குற்றமாகும். அது தொடர்பில் எமது கவலையைத் தெரிவிக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மிஹிந்தலை புனித பூமியில் இருந்து இராணுவத்தினரை அகற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

மிஹிந்தலை புனித பூமியை பாதுகாக்கும் கடமையில் பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் சிவல் பாதுகாப்பு படையினர் பாரிய சேவையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவர்களுக்குத் தெரியாத 2 பேர் அங்கு இரகசியமாக மறைந்திருப்பதாக பொலிஸாரே கைது செய்துள்ளனர். மஹாநாயக்க தேரருக்கும் தெரியாமலே இந்த 2 பேரும் அங்கு தங்கி இருந்துள்ளனர்.

இவ்வாறு இரகசியமாக மறைந்திருந்த 2 பேரைக் கைது செய்தமைக்காக, புனித பூமியில்  சேவை செய்துவந்த 250 பாதுகாப்பு படையினரையும் அங்கிருந்து நீக்கிக்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றமை மிகவும் மோசமான கூற்றாகும்.

அதேநேரம் இனம் தெரியாத 2 பேர் இருப்பதாகத் தெரிவித்து, சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கும்போது, 250 பேரையும் அங்கிருந்து நீக்கிக்கொள்வதாகத் தெரிவிப்பது பாரிய குற்றமாகும்.

அரசமைப்பினூடாக பௌத்தம் காக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுதான் இந்த நாட்டின் சட்டம். அதனை மறந்து செயற்படக்கூடாது. எனவே பிழையான கருத்தைத் தெரிவித்து மோசமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய முப்படையினருக்கு களங்கம் வரும் வகையில் செயலாற்ற வேண்டாம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.