லண்டனில் பல லட்சம் டொலர் பெறுமதியான நிறுவனங்களை சொந்தமாக்கிய அமைச்சர்!

கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் லண்டனில் வர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்பதை புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பான பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், வணிகர்கள் மற்றும் குற்றவாளிகளின் நிதி ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்களை அம்பலப்படுத்தும் வகையில் பண்டோரா ஆவணம் பல விடயங்களை வெளியிட்டு வருகின்றது.

அதன்படி லண்டனில் 2006 இல் சுமார் 960,000 டொலருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் ப்ரொம்ப்டன் ப்ரொப்பர்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை வாங்கினார் என்றும் 2008 ஆம் ஆண்டு பான்ஹாம் வென்ச்சர்ஸ் லிமிடெட் என்ற இரண்டாவது நிறுவனத்தை வாங்கினார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கசிந்த ஆவணங்களில் உள்ள ஓர் அறிவிப்பின்படி, பி.வி.ஐ நிறுவனங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்ட நிதி, ஒரு தொழிலதிபராக டிரன் அலஸ்ஸிடம் இருந்து வந்ததைக் காட்டுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.