மட்டுவில் குரங்குகள் அட்டகாசம் சேதமடைகின்றன வீட்டு கூரைகள் பொதுமக்கள் கவலை

மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் குறிப்பாக காத்தான்குடி நகர சபை பிரிவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பெரும் எண்ணிக்கையிலான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வீட்டுக் கூரைகளின் மீது ஏறிப் பாய்வதால், தற்போதைய பருவமழை காலத்தில் நனைந்து ஈரத்தன்மையுடன் காணப்படும் ஓடுகள் உடைந்து நீர் ஒழுக்கு காணப்படுவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேவேளை அங்கே மக்கள் தமது தேவைக்காக வைத்திருக்கும் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களையும் குரங்குகள் சாப்பிட்டுவிடுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், இந்த குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.