இலங்கை இராணுவத்துக்கு தலைமை அதிகாரி நியமனம்

கஜபாகு படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவியை பொறுப்பேற்கும் முன், மேற்கு பாதுகாப்பு படை  கட்டளைத் தளபதியாக அவர் தனது கடமைகளை ஆற்றியிருந்தார்.

அவர், பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியை பெற்று 1988 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

அவரது இராணுவ சேவையின் போது படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2021 ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி  மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யுத்த நடவடிக்கைகளில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூர பதக்கம்’ ஆகிய விருதுகளைப் பெற்றார், மேலும் அவரது தவறற்ற சேவைக்காக ‘விசிஷ்ட சேவா பதக்கம்’ என்ற விருதும் பெற்றார்.

மேஜர் ஜெனரல் பீரிஸ் ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் மற்றும் விசிஷ்ட சேவா பதக்கம் ஆகிய விருதுகளை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மேஜர் ஜெனரல் பீரிஸ், இராணுவ புலனாய்வுப் பிரிவின் கர்னல் தளபதி பதவியையும் வகித்து வருகிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.