டெங்கு ஒழிப்பும் விழிப்புணர்வும்!

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு மற்றும் பூச்சியியல் ஆய்வுகூடம் 15 பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, கல்முனை கிளையின் தலைவர் எஸ்.எல்.எம்.கரீம் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ்.ஆர். இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந்து ஆலயத்தின் முக்கிய பிரமுகர்கள், பள்ளிவாசலின் முக்கிய பிரதிநிதிகள், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை ஊழியர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மஹல்லாவிலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் வீடுகளுக்கும் தொண்டர்கள் சென்று வீடுகளின் உள்பகுதி உட்பட சுற்றுப்புறங்களை பரிசோதனை செய்து டெங்கு தொடர்பான விழிப்புணர்வை வழங்கியதுடன் டெங்கு நுளம்பு பெருகும் பொருள்களை வீட்டிலுள்ளவர்களின் துணையுடன் அகற்றி மாநகர சபை வாகனங்களில் ஒப்படைத்தனர். பொது அமைப்புக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தால் தொண்டர்களின் கள செயற்பாடு ஹைராத் பள்ளிவாசல் மஹல்லாவின் எல்லையை தான்டி ஏனைய பள்ளிவாசல்களின் மஹல்லா எல்லை வரை விரிவடைந்து சென்றது.

இவ் வேலைத்திட்டத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு டெங்கு நோய், அதனை பரப்பும் நுளம்பின் வாழ்க்கை மற்றும் வாழ்விடம், வாழ்விடங்களை அகற்றும் வழிமுறை, களவேலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு பள்ளிவாசலில் நடைபெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.