மாணவர்களின் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கத் தென்னகோன் விசேட நடவடிக்கை!

பாடசாலைக்கு உள்ளே மற்றும் வெளியே முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கு பொருத்தமற்ற போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகொன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

சமீப காலமாக நாட்டில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பொருத்தமற்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் பொருத்தமற்ற செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு உள்ளே மற்றும் பாடசாலைக்கு வெளியே பிள்ளைகளுக்குப் பொருத்தமற்ற பல்வேறு விடயங்கள் இடம்பெறுகின்றன எனத் தகவல்கள் வெளியாகின்றன.

பாடசாலைக்கு 500 மீற்றர் இடைவெளியில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்குப் பொருத்தமற்ற விடயங்களை விநியோகிக்கும் மற்றும் மாணவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் போது இடம்பெறுவதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.

இது தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து பிரதேசங்களிலுமுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

போலிஸாரை ஈடுபடுத்தி பாடசாலைக்குள் மற்றும் வெளியில் முன்னெடுக்கப்படும் அனைத்து முறையற்ற நடவடிக்கைகளும் ஒழிக்கப்படும். – என அவர் மேலும் தொவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.