எந்தச் சவால்களையும் வெற்றிகொள்ளும் தலைமுறையாக நாம் மாறுதல் வேண்டும்! பிரதமர் தினேஷ் ‘அட்வைஸ்’

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் கல்வியில் புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. கல்வியையும் அறிவையும் மஹாபொலவின் நிழலில் ஒன்றிணைப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

சவால்களை வெற்றிகொள்வதற்கு பாரம்பரியத்தை மாற்றி புதிய சவால்களை வெற்றிகொள்ளும் ஒரு நாட்டின் தலைமுறையாக நாம் மாற வேண்டும் என  பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜா-எல நகரசபை விளையாட்டரங்கில் நடைபெற்ற மஹாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் –

ஒவ்வொரு தாயும் தந்தையும் தமது குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள். எமது கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் உள்ள பெருந்தொகையான பிள்ளைகளுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசில் எதிர்காலத்தில் சிறுவர்கள் எதிர்நோக்க வேண்டிய பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் இவ்வாறான விளைவை ஏற்படுத்த முடியும்.

மஹாபொலவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய பிள்ளைகள் இன்றும் எமது நாட்டின் பல்வேறு நிறுவனங்களிலும் சர்வதேச ரீதியிலும் பணியாற்றி வருகின்றனர். மஹாபொல வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது எமது நாட்டின்
வளரும் தலைமுறைக்கானதாகும். மஹாபொல ஆரம்பிக்கப்பட்ட போது விரல்விட்டு எண்ணக்கூடிய பல்கலைக்கழகங்கள் குறைவாகவே இருந்தன.

இன்று நாட்டில் மூன்று முதல் நான்கு மடங்கு அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

மஹாபொல என்பது புதிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தை சவால்களை சமாளிக்கும் வகையில் மாற்றியமைக்கும் ஒரு மையமாகும்.

மஹாபொலவின் நிழலில் கல்வியையும் அறிவையும் இணைக்க முடியும். சவால்களை வெற்றிகொள்வதற்கு பாரம்பரியத்தை மாற்றி புதிய சவால்களை வெற்றிகொள்ளும் ஒரு நாட்டின் தலைமுறையாக நாம் மாற வேண்டும் என்று மஹாபொலவின் இந்த வேலைத்திட்டம் கூறுகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.